கையில் சரக்கு பாட்டிலுடன் விவாகரத்தை கொண்டாடிய பிரபல நடிகை
தன்னை அடிப்பதோடு மட்டுமின்றி ரியாஸுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ஷாலினி.;
சென்னை
வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் போட்டோ ஷூட் மூலம் கொண்டாடப்படுகிறது. இதையெல்லாம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட விரும்புபவர்களும் உண்டு.தற்போது சமூக வலைதளங்களில் பதிவான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜஸ்ட் மேரேஜ் என்று சொல்வது போல ஜஸ்ட் டைவர்ஸ் போட்டோ ஷூட் செய்த நடிகை .
பிரபல டிவி தொடரான முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி. சீரியலில் மட்டுமின்றி சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு உள்ளார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் தனது திறமையை நிரூபித்தவர்.
ஷாலினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டு இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்துக்கு பிறகு தனியாக இருந்த ஷாலினிக்கு ரியாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினியின் ரசிகர் என கூறி ரியாஸ் பழகியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக ஷாலினியும் அறிவித்தார்
ஷாலினிக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனது போல் ரியாஸுக்கும் விவாகரத்து நடந்திருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் இரண்டும் பேரும் திருமணம் செய்துகொண்டனர். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. சுமூகமாக சென்ற அவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால், ரியாஸ் தன்னை பலமுறை அடித்து துன்புறுத்தியதாக ஷாலினி கூறியிருந்தார்.
தன்னை அடிப்பதோடு மட்டுமின்றி ரியாஸுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து மனு தாக்கல் செய்தார் ஷாலினி. தற்போது அவருக்கு விவாகரத்தும் கிடைத்திருக்கிறது. இதனை போட்டோ ஷூட் நடத்தி ஷாலினி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டோ ஷூட்டில் திருமணம் ஆன புதிதில் ரியாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கிழிப்பது போலவும், கணவரின் புகைப்படத்தை காலில் போட்டு மிதிப்பது போலவும் போஸ் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி கையில் ஒரு கறுப்பு பலகையை ஏந்தியிருக்கிறார். அந்த பலகையில், எனக்கு 99 பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால் கணவர் இல்லை என எழுதப்பட்டு உள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்களில் பலர் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துபவர் நீங்களாக இருக்க வேண்டும் என்கிறார் ஷாலினி. மோசமான திருமணத்தை விட்டு வெளியேறுவது இயல்பானது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர் என்று நம்புங்கள். விவாகரத்து ஒருபோதும் தோல்வியின் அடையாளம் அல்ல. உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வர இது திருப்புமுனை என்றும் ஷாலினி கூறி உள்ளார்.