நடிகைக்கு எலும்பு முறிவு - கணவர் பகிர்ந்த பதிவு வைரல்

திவ்யங்கா திரிபாதியின் கணவர் விவேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2024-04-20 07:08 IST

image courtecy:instagram@divyankatripathidahiya

மும்பை,

பிரபல இந்தி நடிகை திவ்யங்கா திரிபாதி. இவர் 'பனு மெயின் தேரி துலான்', 'யே ஹா முகபதைன்' உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமானார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட திவ்யங்கா திரிபாதி, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார். பரிசோதனையில் தசைநார் கிழிவு பிரச்சினை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் வீட்டின் மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக கால்தவறி திவ்யங்கா திரிபாதி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திவ்யங்கா திரிபாதியின் கணவர் விவேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் அவர், 'அனைவரது பிரார்த்தனைகளும், வேண்டுதலும் என் அன்பான மனைவியின் உடல்நலம் தேற உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்