'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் டிரெய்லர்

இயக்குனர் ஆனந்தின் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.;

Update:2024-07-21 20:05 IST

சென்னை,

ஹிப்ஹாப் ஆதி இயக்கிய 'மீசைய முறுக்கு' படத்தில் தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆனந்த். இவர் தற்போது 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் 'கோட்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளராகவும் உருவெடுத்த நிலையில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பவானி ஸ்ரீ, மோனிகா, இர்பான் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான பாடல்களை தனுஷ் மற்றும் ஜி.வி பிரகாஷ் பாடியுள்ளனர். இந்த படமானது, இளைய தலைமுறையினரின் நட்பை பற்றிய கருத்தை மையமாக கொண்ட படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு சுனில் காஷிப் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரெய்லரில் ஒரு பீல் குட் படத்துக்கான அனைத்து விஷயங்களும் அமைந்து இருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்