'வாழை' திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

‘வாழை’ படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;

Update:2024-08-25 19:53 IST

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'வாழை' திரைப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...! 'என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இயக்குநர் பாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் தற்போது இயக்குநர் சங்கரும் படத்தை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்