'லியோ' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
‘லியோ’ படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் 'லியோ' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'லியோ' திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 'லியோ' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் திரையில் இணைந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி!! லியோ தாஸ் உண்மையில் மிரட்டல்!! லியோ குழுவிற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.