'இந்த படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை' - சமந்தா பகிர்ந்த தகவல்
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ்.;
சென்னை,
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு குமாரராஜா இயக்கிய படம் சூப்பர் டீலக்ஸ். முதலில் இந்தப் படத்திற்கு அநீதி கதைகள் என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், சூப்பர் டீலக்ஸ் என்று டைட்டில் மாற்றப்பட்டது. இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில், பகத் பாசில், சமந்தா , மிஷ்கின் , ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி , காயத்ரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை சமந்தாவை படக்குழு முதலில் அணுகவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சமந்தா கூறியதாவது, 'இப்படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. எனக்கு முன்பு இரண்டு நடிகைகளை இயக்குனர் குமாரராஜா அணுகினார். அவர்கள் சம்மதிக்காததால், சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்தேன்', இவ்வாறு கூறினார்.