தனுஷின் 'ராயன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
ராயன் படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
சென்னை,
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில், ராயன் படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
#Raayan pic.twitter.com/Gss1Ti1x3z
— Dhanush (@dhanushkraja) July 9, 2024