அடைமொழிக்கு ஆசைப்படாத தனுஷ்

முன்னணி கதாநாயகனான தனுஷ், ‘எனக்கு பட்டமே வேண்டாம்' என்று பிடிவாதமாக இருக்கிறார்.

Update: 2022-10-16 03:56 GMT

தமிழ் திரை உலகில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னால் அடைமொழி இடம் பெறும் வழக்கம் இருக்கிறது. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'இளைய தளபதி' விஜய், 'அல்டிமேட் ஸ்டார்' அஜித்குமார் என முன்னணி நடிகர்கள் அடைமொழியுடன் வலம் வருகிறார்கள்.

ஆனால் பல நடிகர்கள் தங்களுக்கு அடைமொழி வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கிறார்கள். முன்னணி கதாநாயகனான தனுஷ், 'எனக்கு பட்டமே வேண்டாம்' என்று பிடிவாதமாக இருக்கிறார். ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு வேண்டுகோள் வைத்த போதும் தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரை 'இளம் சூப்பர் ஸ்டார்' என்று சிலர் அழைத்த போது, கையெடுத்து கும்பிட்டு 'இந்த அடைமொழியே வேண்டாம்பா' என்று மறுத்தார்.

இது போலவே சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா, விமல், ஜெய் உள்ளிட்ட பலரும் அடைமொழி தங்களுக்கு வேண்டாம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்