மிக்ஜம் புயல் பாதிப்பு: நடிகர் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் நிதி உதவி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.;

Update: 2023-12-06 12:54 GMT

சென்னை,

தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். சட்டப்படி குற்றம், பொறியாளன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு, எல்.ஜி.எம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்