சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
சினிமா தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: நடிகை ஸ்ரேயா ஒரு குத்துப்பாடலுக்கு ஆட ரூ.1 கோடி கேட்கிறாராமே? (கணிகைவேல், மாடக்குளம்)
பதில்: 'ஆட்டத்துக்கு இதுதான் ரேட்டு..' என்று அறைகூவல் விடுகிறாராம்!
***
கேள்வி: நடிகர்-நடிகைகள் இடையே ஏற்படும் காதல் புனிதமானதா? (டேவிட் சின்னதுரை, கரூர்)
பதில்: புனிதத்தை தாண்டியது!
***
கேள்வி: கார்த்திக்கு ரசிகர்கள் அதிகமா? ரசிகைகள் அதிகமா? (புனிதா, திருச்சி)
பதில்: ரசிகர்களுக்கு இணையாக ரசிகைகளும் இருக்கிறார்களாம்!
***
கேள்வி: தமிழ் நடிகைகளுக்கும், மலையாள நடிகைகளுக்கும் இடையே என்ன வித்தியாசம்? (மாசி, ஆத்தூர்)
பதில்: தமிழ் நடிகைகள் குணத்தால் உயர்ந்தவர்கள். மலையாள நடிகைகள் மனதால் உயர்ந்தவர்கள்!
***
கேள்வி: 'அமுல்பேபி' நமீதா இனி நடிக்கவே மாட்டாரா? ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க மாட்டாரா? (யாசீன், திருவள்ளூர்)
பதில்: பூ கட்சியில் ஐக்கியமாகிவிட்ட அவர், இனி நடிப்பது அரிது!
***
கேள்வி: 'வாளை மீனு...' புகழ் மாளவிகா என்னதான் செய்கிறார்? (கவிநேயன், தேனி)
பதில்: குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்!
***
கேள்வி: நடிகை தேவயானியை மீண்டும் திரையில் பார்க்கவே முடியாதா? (சுதாகர், மதுரை)
பதில்: சின்னத்திரையில் பார்க்கலாம். ஒரு புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்!
***
கேள்வி: மகள் வயது நடிகையுடன் அமீர்கான் காதலில் ஈடுபட்டிருக்கிறாராமே? (அருணாசலம், பூதகுடி)
பதில்: டூ லேட். விவகாரம் திருமண பேச்சு வரை சென்றுவிட்டது!
***
கேள்வி: பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் விமான நிலையத்துக்கு கையில் தலையணையுடன் சென்றுள்ளாரே, என்னவாக இருக்கும்? (அரவிந்தன், பள்ளிபட்டு)
பதில்: ரொம்ப யோசிக்க வேண்டாம். முதுகுக்கு இதமாக இருக்கத்தான்!
***
கேள்வி: சமந்தா திரையுலகில் இருந்து விலக போகிறாராமே... (வண்ணை கணேசன், சென்னை-110)
பதில்: 'சாகுந்தலம்' பட தோல்வியால் துவண்டு போயிருக்கிறார். விரைவில் மீண்டு(ம்) வருவார்!
***
கேள்வி: கன்னட நடிகர் யாஷ் காதல் படங்களில் இனி நடிப்பாரா? (வி.சுந்தர், கார்னேந்தல்)
பதில்: 'கே.ஜி.எப்.' பட வெற்றிக்கு பிறகு 'மாஸ் ஹீரோ'வாகி விட்டார். எனவே இனி 'இச்... இச்...' எல்லாம் கிடையாது. 'டிஷ்யும்... டிஷ்யூம்...' தான்!
***
கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே வியக்க வைத்த நடிகை இருக்கிறாரா? (ஊமைத்துரை, உறையூர், திருச்சி)
பதில்: மனோரமா. இவர் பேசும் வசன உச்சரிப்பை கண்டு வியந்து போனவர்களில் சிவாஜியும் ஒருவர்!
***
கேள்வி: 100 பேரை கூட ஹீரோ சர்வசாதாரணமாக அடித்து நொறுக்கும் அசாதாரண சண்டை காட்சிகள் இன்னமும் வந்து கொண்டிருப்பது எதை காட்டுகிறது? (டி.ராஜசேகரன், திருச்செந்தூர்)
பதில்: இதென்ன பிரமாதம், தெலுங்கில் பாலைய்யா (பாலகிருஷ்ணா) படங்களையெல்லாம் பார்த்தது இல்லையா... ரசிகர்கள் விரும்புவதை சினிமா தருகிறது. 'லாஜிக்' பார்த்தால் 'மேஜிக்' தெரியாது!
***
கேள்வி: இந்தோனேஷியாவில் 'குடும்ப பாங்கு' நடிகை வாணி போஜன் 'பிகினி' உடையில் வலம் வருகிறாராமே? (செல்வ பிரகாஷ், சேலம்)
பதில்: அங்கு வெயில் 80 டிகிரி செல்சியஸ் வரை அடிக்கிறதாம். சற்று காற்றோட்டமாக இருக்கத்தான் அப்படி!
***
கேள்வி: படங்களில் போதைப்பொருட்கள் பற்றி தெளிவாக சொல்லப்படுகிறதே, இதுவே பாதிப்பை ஏற்படுத்திவிடாதா? (கனகவல்லி, ஆத்தூர், சேலம்)
பதில்: விபரீதமாக ஏன் பார்க்கவேண்டும், விழிப்புணர்வாக பார்க்கலாமே...!
***
கேள்வி: வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகர் யார்? (சி.செல்வராஜ், பிள்ளையார்பட்டி)
பதில்: ராஜ்கிரண்!
***
கேள்வி: மலையாள சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்? (எஸ்.டி.துரைராஜ், குன்னூர்)
பதில்: மலையாளம் 'யதார்த்தம்'. தெலுங்கு 'பதார்த்தம்'!
***
கேள்வி: குருவியாரே... ஒரு 'கிசுகிசு' சொல்லுங்களேன்... (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: 'வானவில்' நடிகை அடிக்கடி 'பார்ட்டி'களுக்கு சென்று பெரிய மனிதர்களுடன் 'விழுந்து... விழுந்து...' சிரிக்கிறாராம். நாற்பதிலும் நளினம் குறையவில்லையாம்!
***
கேள்வி: நடிகர் அருள்நிதி பற்றி... (கவிதா, கடச்சனேந்தல்)
பதில்: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நல்ல நடிகர்!
***
கேள்வி: பாலியல் தொல்லை புகார்களை படவாய்ப்புகள் இல்லாதபோது நடிகைகள் கொடுக்க காரணம் என்ன? (ஆளவந்தான், விருதுநகர்)
பதில்: இருக்கும்போது சொல்ல முடியாதல்லவா... அதுதான்!
***
கேள்வி: 60 வயதில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் செய்துகொண்டுள்ளாரே... (ரேவதி கிருஷ்ணன், நாமக்கல்)
பதில்: 'வாழ்க்கை பயணத்தில் துணை வேண்டும். வயதெல்லாம் விஷயம் அல்ல', என்கிறார். என்ன ஒரு எதார்த்தம்!
***
கேள்வி: கணவர்-குழந்தை என குடும்பத்தை கவனித்து கொண்டு, படத்திலும் நடிக்கிறார் காஜல் அகர்வால். எப்படி சமாளிக்கிறார்? (அறிவழகன், விளாங்குடி)
பதில்: பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் 'மல்டி டாஸ்க்' திறன் கொண்டவர் காஜல். இதெல்லாம் அவருக்கு 'ஜூஜூபி'!
***
கேள்வி: 'கதை தேடும் ஆர்வத்தில் வயதை மறந்துவிட்டேன்', என்கிறாரே அனுஷ்கா? (ஆவுடையப்பன், கிருஷ்ணகிரி)
பதில்: விரக்தி தரும் பேச்சு இது!
***
கேள்வி: கமல்ஹாசன் ஆஸ்கார் விருது வாங்குவாரா? (திருத்தரணீசுவரர், திருத்தணி)
பதில்: அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நம்புவோம்!
***
கேள்வி: படங்களில் நடிப்பதற்கு முன்பு யோகிபாபு என்ன செய்து கொண்டிருந்தார்? (வில்வராஜ், செம்மறிகுளம்)
பதில்: சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்!
***
கேள்வி: 'திருமகள் தேடி வந்தாள். எந்தன் இதயத்தில் குடி புகுந்தாள்...' என்ற பாடலை எழுதியவர் யார்? (கண்ணம்மாள், காடமங்கலம்)
பதில்: 1971-ம் ஆண்டு வெளியான 'இருளும் ஒளியும்' என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் வரிகள் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவானது!
***