மீண்டும் அரியணைக்காக சண்டையிடும் சோழர்கள் - 'பொன்னியின் செல்வன் - 2' டிரைலர் குறித்த அறிவிப்பு

'பொன்னியின் செல்வன் - 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-03-24 13:37 GMT

சென்னை,

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'பொன்னியின் செல்வன் 2-ம் பாகம்' வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வருகிற 29-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்