ஜப்பான் விஜய் ரசிகைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை ரசிகர்கள் - வைரல் வீடியோ

விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.;

Update:2024-08-17 09:25 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான "நாளைய தீர்ப்பு" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்து அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

இவருக்கு, தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய்யை பார்க்க வந்த ஜப்பான் ரசிகைகளுக்கு சென்னை ரசிகர்கள் செய்த மறக்க முடியாத செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜப்பனை சேர்ந்த விஜய் ரசிகைகள் 3 பேர் விஜய்யை பார்க்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். ஆனால், படப்பிடிப்பு தொடர்பாக விஜய் வெளியில் சென்றிருந்ததை அறிந்து மனமுடைந்திருக்கின்றனர்.

அப்போதுதான், அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். நாடு கடந்து தலைவரை பார்க்க வந்திருப்பதை அறிந்து அவர்கள் 3 பேருக்கும் பொன்னாடை போர்த்தினர். அப்போது அதில் ஒரு ரசிகை 'நா ரெடிதான் வரவா' பாடலை பாடி நடனமாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்