பாம்பே ஜெயஸ்ரீ நலமுடன் உள்ளதாக அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவு

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது” என்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-03-25 02:21 GMT

லண்டன்,

கர்நாடக இசைக்கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ(வயது 58) லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திடீர் உடல்நல பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

இங்கிலாந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பாம்பே ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ குணம் அடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக பாம்பே ஜெயஸ்ரீயின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்