"ஆடை மாற்ற நேரமில்லை" போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி பதில் அளித்த உர்பி ஜாவேத்
உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார்.;
மும்பை
இந்தி நடிகை உர்பி ஜாவேத் அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. சமீபத்தில் துபாயில் கவர்ச்சி உடையில் வீடியோ எடுத்து போலீசில் பிடிபட்டதாக தகவல் வெளியானது. அதை உர்பி ஜாவேத் மறுத்து இருந்தார்.
சமீபத்தில் பதான் படத்தில் தீபிகா படுகோனே காவி நீச்சல் உடை அணிந்து ஷாருக்கானுடன் கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தீபிகா படுகோனே மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஷாருக்கான் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தீபிகா படுகோனேவுக்கு உர்பி ஜாவேத் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதோடு காவி உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்தும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்து இருந்தார்.
இஇது தொடர்பாக போலீசார் உர்பி ஜாவித்துக்கு சம்மன் அனுப்பினர்.
நடிகை உர்பி ஜாவேத் இன்று விசாரணைக்காக அம்போலி காவல் நிலையத்தில் ஆஜரானார்.உர்பியிடம் போலீசார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஒன்றரை மணி நேர விசாரணையில் உர்பி சொன்னது குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எனது ஆட்டத்தை நான் நிறுத்த மாட்டேன்' என்று பயமின்றி கூறிய உர்பி, போலீஸ் விசாரணையில் மனம் தளராமல் எதிர்கொண்டார்.
உர்பி போலீசாரிடம் கூறியதாவது:-
நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எனக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது.'எனது வேலைக்கு ஏற்ப இந்த ஆடைகளை அணிகிறேன்'.'நான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறேன்., சில சமயங்களில் வேலை நெருக்கடியில் உடை மாற்ற நேரம் கிடைக்காது.
உடை மாற்றிக் கொள்ள நேரமில்லாததால், நான் அப்படியே வெளியே செல்வேன், அப்போதுதான் புகைப்படக் கலைஞர்கள் வெளியே வந்து புகைப்படம் எடுக்கிறார்கள், அவை வைரலாகின்றன.இப்போது வைரலாகி வரும் புகைப்படங்களை எப்படி நிறுத்துவது?' என உர்பி கூறினார்.