5 வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடிக்கும் பாவனா

5 வருடங்களுக்குப் பிறகு மலையாள படப்பிடிப்புக்கு வந்த பாவனாவுக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.;

Update:2022-06-24 14:15 IST

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து ஜெயம் கொண்டான், அசல், தீபாவளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். 2017-ல் கடைசியாக பிருதிவிராஜ் ஜோடியாக ஆடம் ஜான் என்ற படத்தில் நடித்து இருந்தார். 2018-ல் கன்னட தயாரிப்பாளர் நவீனை பாவனா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கன்னட படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தமிழ், மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் எண்டிக்காக்கொரு பிரேம முண்டார்னு என்ற மலையாள படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை அதில் அஷ்ரப் இயக்குகிறார். ஷரப், அனார்கலி நாசர், அர்ஜுன் அசோகன், ஷெபின் பெஞ்சன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்க வந்த பாவனாவுக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. பாவனாவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்