சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புகிறார் பாரதிராஜா

ஓரிரு நாட்களில் பாரதிராஜா வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது

Update: 2022-09-02 09:44 GMT

சென்னை,

இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அடுத்து தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் நலமுடன் உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாரதிராஜாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் பாரதி ராஜா வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்