ராணி முகர்ஜி பகிர்ந்த அழகு ரகசியம்
நடிகை ராணி முகர்ஜி தன் அழகு ரகசியத்தை அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.;
'ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்த ராணி முகர்ஜி இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். உடற்பயிற்சி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் சில நடிகைகளில் ராணி முகர்ஜியும் ஒருவர்.
ராணி முகர்ஜி அளித்துள்ள பேட்டியில், ''ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்குவேன். அதுவும் தவிர அனைவரையும் போல செயற்கையான முறைகளை அல்லாமல் என் அம்மா சொன்ன சின்ன சின்ன டிப்ஸ் அனுசரித்து என் அழகைக் காப்பாற்றிக்கொள்கிறேன். இதுதான் எனது அழகின் ரகசியம்.
தண்ணீர் அதிகமாக குடிப்பேன். அத்துடன் ஆலுவேரா ஜூஸ், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சீரா வாட்டர் கண்டிப்பாக எடுத்துக்கொள்வேன். இவை உடலில் உள்ள கெட்ட மற்றும் கேடு விளைவிக்கும் அனைத்தையும் வெளியேற்றிவிடும். சருமத்தை மென்மையாக்கி மின்னச்செய்யும்.
உணவு கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பேன். வேகவைத்த காய்கறிகளையே அதிகம் சாப்பிடுவேன். இவையெல்லாம் நம்மை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவி செய்யும்" என்றார்.