பாலகிருஷ்ணா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான NBK 109 கிளிம்ப்ஸ் வீடியோ
டோலிவுட்டின் மாஸ் ஹீரோவான பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 109-வது படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலையா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலகிருஷ்ணா தற்பொழுது அவரது 109 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார். பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபல இந்தி நடிகரான பாபி டியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலையா நடிப்பில் வெளியான அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி படங்களின் ஆக்சன் காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டாலும் அதே பாணியில் அதிரடி காட்டி வருகிறார்.