அதர்வா நடித்துள்ள 'டிரிக்கர்' படத்தின் டிரைலர் வெளியீடு

இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது

Update: 2022-09-10 12:49 GMT

சென்னை,

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணன் வசந்த் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டிரிக்கர்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் வெளியாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது,

Tags:    

மேலும் செய்திகள்