'கற்றார்' எனும் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

இன்று 'கற்றார் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.;

Update: 2023-01-06 14:32 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது பிறந்தநாளான இன்று 'கற்றார் (KATRAAR)' புதிய டிஜிட்டல் பிளாட்பார்ம் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்பார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும் பணமாக்கவும் அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார். பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்