'உங்கள் ஆசைகள் அனைத்தும்...' - இணையத்தில் வைரலாகும் வெங்கட் பிரபுவின் பதிவு
இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.;
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் கொண்டு வந்துள்ளது படக்குழு. தற்போது, மறைந்த பாடகி பவதாரணி குரலை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கோட் படத்தில் வெங்கட்பிரபு கொண்டு வந்துள்ளாராம்.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், 'உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்' என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.