ராமாயணம் படத்தில் ராமர்-சீதை வேடத்தில் ஆலியா-ரன்பீர் ஜோடி; ராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்...?

ராமாயணம் படத்தில் ராமர் மற்றும் சீதை வேடத்தில் ஆலியா, அவரது கணவர் ரன்பீர் இருவரும் நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

Update: 2023-06-08 13:37 GMT

ஐதராபாத்,

திரைப்பட இயக்குநர் நித்தேஷ் திவாரியின் ராமாயணம் படத்தில் ராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான, இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

நடிகை ஆலியா பட், 2022-ம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் முன்பே சீதை வேடம் ஏற்று நடித்து உள்ளார். இதேபோன்று ராமாயணம் படத்தில், ராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில், கே.ஜி.எப். பட புகழ் நடிகர் யாஷ் பெயர் அடிபடுகிறது.

இதுபற்றி கிடைத்த தகவலின்படி, படத்தில் முதல் தேர்வாக ஆலியா பட் உள்ளார். எனினும், படப்பிடிப்புக்கான சரியான தேதிகள் எண்ணற்ற காரணங்களால் ஒத்து வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும், படம் உருவாவதற்கு நீண்டகாலம் தாமதம் ஏற்படும் சூழலில், இயக்குனர் மது மந்தனா மற்றும் நித்தேஷ் இருவரும் தங்களது முதல் தேர்வில் உறுதியாக இருப்பது என முடிவு செய்து உள்ளனர்.

நடிகை ஆலியாவும், வாழ்நாள் முழுமைக்கும் பெருமையளிக்க கூடிய ஒரு வேடத்தில் நடிக்கும் உற்சாகத்தில் உள்ளார். ரன்பீர் கபூரும், கடவுள் ராமராக நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

அல்லு அரவிந்த், மது மந்தனா மற்றும் நமீத் மல்கோத்ரா உள்ளிட்டோரும் பட உருவாக்கத்தில் உள்ளனர். ரவி உதயவார் இணை இயக்குநராக பணிபுரிகிறார். இந்த படம் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆலியா மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி, கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பிரம்மஸ்திரா பாகம் ஒன்று சிவா என்ற படத்தில் ஒன்றிணைந்து நடித்து இருந்தனர். ஆலியா அடுத்து, ஹார்ட் ஆப் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ரன்வீர் சிங்குடன் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்