குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி அஜித்குமார்

ஷாலினி அஜித் குமார் தன் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தங்கை ஷாமிலியுடன் சென்று மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.;

Update:2024-06-07 17:41 IST

சென்னை,

தமிழ்த்திரை உலகில் அக்காவும், தங்கையும் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்கள் என்றால் அது பேபி ஷாலினியும், பேபி ஷாமிலியும்தான். பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்கள். நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சிரஞ்சீவியை சந்தித்து பேசியிருக்கிறார்கள் ஷாலினியும், ஷாமிலியும். அப்பொழுது அண்ணன் ரிச்சர்ட் ரிஷியும் உடனிருந்திருக்கிறார்.

சிரஞ்சீவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தாங்கள் குழந்தையாக இருந்தபோது சிரஞ்சீவி, ஸ்ரீதேவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

சிரஞ்சீவி தற்போது விஷ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வசிஷ்டா இயக்குகிறார். குட் பேட் அக்லி படப்பிடிப்புக்காக அஜித்குமார் ஹைதராபாத் சென்ற இடத்தில் சிரஞ்சீவியை விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். மேலும், படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார். இது தொடர்பான படங்கள் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியும், ஸ்ரீதேவியும் ஜோடியாக நடித்த படத்தில் ரிச்சர்ட், ஷாலினி, ஷாமிலி ஆகியோர் நடித்திருந்தார்கள். அந்த படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படத்தைதான் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்