புத்தர் கோவிலில் அஜித் வழிபாடு

இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் அஜித்குமார் தற்போது புத்தர் கோவிலுக்கும் சென்று வழிப்பட்டார்.

Update: 2022-09-14 02:51 GMT

அஜித்குமார் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த பயணத்தில் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டு இருந்தார். இந்த பயணத்தின்போது அஜித்குமார் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்குமாருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் அஜித்குமார் தற்போது புத்தர் கோவிலுக்கும் சென்று வழிப்பட்டார். புத்த விகாரத்தை அஜித்குமார் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்குமார் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்து வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்