பிக்பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்குவது கமல்ஹாசன் அல்ல - யார் தெரியுமா?

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.;

Update:2024-08-11 05:01 IST

சென்னை,

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக இல்லாமல் பல சினிமா அனுபவங்களையும் புத்தகங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார். சமீபத்தில், தொகுப்பாளராக கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக மற்றொரு பிரபல நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் சீசன் 8ஐ விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்