பிரபாஸ் நடித்துள்ள படத்தில் சில காட்சிகளை நீக்கவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை: மத்திய பிரதேச மந்திரி எச்சரிக்கை!

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

Update: 2022-10-04 10:12 GMT

போபால்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இது குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா கூறியிருப்பதாவது,

"ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை நான் பார்த்தேன்.அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன. டிரெய்லரில் அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார்.

டிரெய்லரில் காணப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இவை. இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்து மத அடையாளங்களை தவறான முறையில் காட்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக லீலா மணிமேகலை இயக்கிய காளி பட போஸ்டர் குறித்து, உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு மந்திரி நரோட்டம் மிஸ்ரா போலீசிடம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே போன்றதொரு சிக்கல் ஆதிபுருஷ் படத்திற்கும் வந்துள்ளது.+

Tags:    

மேலும் செய்திகள்