ஆடையின்றி நடிக்க வெட்கமில்லை - ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி
சிட்னி ஸ்வீனியின் படுகவர்ச்சி இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
நியூயார்க்,
ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை சிட்னி ஸ்வீனி. இவர் நடித்த எனி பட் யூ மேடம் வெப் போன்ற ஹாலிவுட் படங்கள், அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன.
26 வயதான சிட்னி ஸ்வீனி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக காரணமே , படு கவர்ச்சியாக படத்தில் நடிப்பதால் தான். சிட்னி ஸ்வீனியின் படுகவர்ச்சி இளைஞர்கள் மத்தியில் அவர் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிட்னி ஸ்வீனியிடம், படங்களில் ஆடையின்றி இருக்கும் காட்சிகள் நடிப்பதை குறித்து கேள்வி கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர், நான் எப்போதுமே என்னுடைய இயக்குனர்களை நம்புகிறேன். படங்களில் ஆடையின்றி நடிக்க வெட்கமில்லை. கதைக்கு தேவைப்பட்டதால்தான் அந்த காட்சியை வைக்கிறார்கள். கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.