அவதூறு பரப்புகிறார்கள்: நடிகை பவித்ரா போலீசில் புகார்
தன்னைப் பற்றி ஆபாசமாகவும் பொய்யான பரப்புரைகளையும் சில யூடியூப் சேனல்கள் பரப்புவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் நடிகை புகார் அளித்துள்ளார்;
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் தமிழில், 'கவுரவம்', 'அயோக்யா', 'க/பெ.ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் சில மாதங்களுக்கு செய்திகள் வெளியாயின. நரேஷ், தமிழில் 'நெஞ்சத்தை அள்ளித்தா', 'பொருத்தம்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்தபோது, நரேஷின் 3வது மனைவி ரம்யா, அவர்களை அடிக்கப் பாய்ந்தச் சம்பவம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் ஆர்.ஜே.பாலாஜியுடன் 'வீட்ல விஷேசம்' படத்தில் நடித்துள்ள பவித்ரா லோகேஷ் கன்னடம், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார்.
இவருக்கும் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும் நடிகருமான நரேசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவியது. 60 வயதாகும் நரேஷ் ஏற்கனவே 3 முறை திருமணம் ஆனவர்.
பவித்ராவுக்கு 43 வயது ஆகிறது. இவரும் திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். பவித்ராவும் நரேசும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சமீபத்தில் மைசூரில் பவித்ரா லோகேஷும் நரேசும் ஓட்டலில் ஒரே அறையில் தங்கி இருப்பதை அறிந்து நரேசின் 3-வது மனைவி ரம்யா அங்கு வந்து சண்டை போட்டு பவித்ராவை செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது.
இந்த நிலையில் பவித்ரா லோகேஷ் ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில், ''சில சமூக ஊடகங்களில் என்னை கேலி செய்து அவதூறு தகவல்கள் வருகின்றன. எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தோடு ஆபாச கருத்துகள் பதிவிடுகின்றனர். மார்பிங் செய்த புகைப்படங்களையும் பகிர்கிறார் கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.