கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்... 'எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்'

‘எனது நிர்வாண வீடியோவை விற்பனை செய்தார்' என்று கணவர் மீது கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் புகார் அளித்துள்ளார்.;

Update:2023-02-12 06:53 IST

பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த். இவர் தமிழில், 'என் சகியே', 'முத்திரை', 'கம்பீரம்' உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இவருக்கும், அதில் துரானி என்பவருக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் திருமணம் நடந்தது. தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

அதில் துரானி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து தன்னை அடித்து காயப்படுத்தியதாகவும், லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்து இருந்தார். தனது வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகையை திருடிச்சென்று விட்டதாகவும் கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் துரானியை கைது செய்தனர். தற்போது மீண்டும் அதில் துரானி மீது ராக்கி சாவந்த் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது. "அதில் துரானிக்கு ஜாமீன் கொடுக்க கூடாது. அவர் என்னை ஏமாற்றி விட்டார். எனது பணத்தை வங்கியில் இருந்து மோசடியாக எடுத்து விட்டார். அவர் தொழில் அதிபர் இல்லை. என்னை பயன்படுத்தி இந்தி படங்களில் கதாநாயகனாக நடிக்க விரும்பினார். எனது நிர்வாண வீடியோக்களை எடுத்து சிலருக்கு விற்பனை செய்து இருக்கிறார்'' என்றார். இது பரபரப்பாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்