'எனது தனி உரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை'-நடிகை பாவனா
நீதிமன்றத்தில் எனது உரிமை பாதுகாப்புடன் இல்லை என்பதை அறியும்போது பயமாக இருக்கிறது என்று பாவனா கூறினார்.;
சென்னை,
பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, அசல், தீபாவளி, வெயில், ஆர்யா, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், பாவனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
''ஒருவரின் அடிப்படை உரிமையாக இருப்பது தனி உரிமை. அரசியல் அமைப்பில் எனக்கு வழங்கப்பட்டு உள்ள உரிமை அது. எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிமன்றத்தில் எனது உரிமை பாதுகாப்புடன் இல்லை என்பதை அறியும்போது பயமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டியது நீதிமன்றத்தின் வேலை. ஆனால் நீதிமன்றத்திலேயே இப்படி நடப்பது வருத்தமாக இருக்கிறது.
ஆனாலும் எனக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கை இன்னும் குறையவில்லை. எனக்கு நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து போராடுவேன்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.