3 படங்களை இயக்க நடிகர் விஷால் முடிவு

விஷால் நடித்துள்ள ‘லத்தி’ படம் திரைக்கு வருகிறது. அடுத்து 3 படங்களை இயக்க விஷால் திட்டமிட்டு உள்ளார்.

Update: 2022-12-20 03:07 GMT

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''மார்க் ஆண்டனி படத்தை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து நானே டைரக்டு செய்ய இருக்கிறேன். தொடர்ந்து விலங்குகளை வைத்து இரு படம் இயக்க உள்ளேன். இது எனது கனவு படம். ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்க்க விரும்புகிறேனோ அப்படி ஒரு கதையை எழுதுகிறேன். விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

மேலும் விஷால் கூறும்போது. ''நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. அரசியல் என்பது மக்கள் பணி. அதை இப்போதும் செய்து வருகிறேன். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன். திரைப்படங்களை திருட்டு இணையதளத்தில் வெளியிடுவதை அரசு நினைத்தால் உடனே தடுக்க முடியும். சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட திரைப்பட நகரை உருவாக்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைப்பேன். நான் நடித்துள்ள லத்தி படத்தில் போலீஸ்காரர்களின் பிரச்சினைகள், தந்தை, மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். சண்டை காட்சியில் எனக்கு அதிகம் அடிபட்டது. இந்த படத்தில் எனது நடிப்பு பேசப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்