நடிகர் விஜய்க்கு கேரளா குட்டி ரசிகை கொடுத்த அன்பு பரிசு

விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2024-03-21 17:30 IST

திருவனந்தபுரம்,

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் விஜய் மலையாளத்தில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் விஜய் தனது ரசிகரின் குட்டி பெண் குழந்தையை தூக்கி கொஞ்சிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் அந்த குழந்தையிடம் 'அங்கிளுக்கு' ஒரு 'உம்மா' கொடுங்க என நடிகர் விஜய் கேட்பது போன்ற காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து உள்ளது.

கேரள குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிய போது அந்த குழந்தையின் அம்மா, " அங்கிளுக்கு உம்மா ஒன்னு கொடு" என சொன்னதும் அந்த குழந்தை க்யூட்டாக விஜய் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தளத்தில் 'கொடுத்து வச்ச குழந்தை' என 'கமெண்ட்ஸ்' பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்