'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஜய் ஆண்டனி காயம்
மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.;
சென்னை
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சசி இயக்கியிருந்த பிச்சைக்காரம் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். 2016இல் வெளியாகி தமிழ், தெலுங்கு என சூப்பர் ஹிட்டான படம் பிச்சைக்காரன்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்துள்ளார். சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிச்சைக்காரன் 2 படத்தின் முன்னோட்டம் கடந்த சில மாதங்கள் முன்பு வெளியாகி பாராட்டுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
பிச்சைக்காரன் 2 படத்தை தனது விஜய் ஆண்டன் புரொடக்ஷன் மூலம் தயாரிப்பதோடு, இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிச்சைக்காரன் 2 படத்தில் ஜான் விஜய், ஹரீஷ் பேராடி, ஒய்ஜி மகேந்திரன், அஜய் கோஷ், யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரிங்களில் நடிக்கிறார்கள். படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கொலை, ரதம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களும் தயாராகி வருகின்றன.