சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி... ரசிகர்கள் வாழ்த்து...!

காமெடியில் கலக்கி வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.;

Update: 2023-12-10 08:22 GMT

சென்னை,

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. வித்தியாசமான உடல் மொழியில் சிரிக்க வைக்கும் இவரது காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம், காரி, கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை இன்று திருமணம் செய்துள்ளார். இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சங்கீதா பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். தற்போது இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்