வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்...!

வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறினார்.

Update: 2022-10-24 04:20 GMT

சென்னை,

தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்தி சந்தித்தார். பின்னர் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்