தஞ்சை பெரியகோவிலில் நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம்

தஞ்சையில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பெரியகோவிலில் நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-09-30 12:24 GMT

தஞ்சாவூர்:

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானது. தஞ்சையில் ஜி.வி. தியேட்டரில் வெளியான இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் காலை 8 மணிக்கு வந்தார். அவர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார்.

பின்னர் அங்கிருந்து தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு வந்தார். அவருக்கு மேளதாளம், கரகாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சோழர்களின் கொடியான புலிக்கொடியை கையில் ஏந்தினார்.

அப்போது தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கந்தசாமி மற்றும் பல்வேறு அமைப்புகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அவரை சுற்றி நின்று கொண்டு செல்பி எடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்