கதாநாயகனான 'ஜெய் பீம்' பட நடிகர்

ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞனாக நடித்து பிரபலமான மணிகண்டன் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

Update: 2022-11-02 02:17 GMT

ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞனாக நடித்து பிரபலமானவர் மணிகண்டன். விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஏற்கனவே குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார். சில படங்களில் வசன கர்த்தாவாகவும், உதவி இயக்குனராகவும் மற்றும் மிமிக்ரி கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் அடுத்து புதிய படமொன்றில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் டைரக்டு செய்கிறார். இதில் மணிகண்டனுடன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், டைரக்டர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கின்றனர். குறட்டையை மையமாக வைத்து நகைச்சுவை படமாக எடுக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்