நடிகர் கிங்காங் தாயார் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்
மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு நடிகர் கிங்காங்கின் தாயார் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர் போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்சினிமாவில் நடித்து வருகிறது. இந்தநிலையில், நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் (வயது 72') இன்று அதிகாலை 1.30' மணிக்கு உயிரிழந்தார். நடிகர் கிங்காங் பிறந்தநாளான இன்று அதிகாலை 12.30 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அவரது தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சற்று நேரத்தில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கிங்காங் தனக்கு எல்லாமுமாக இருந்த தனது தாயார் மறைந்ததை எண்ணி பெரும் துயரத்தில் உள்ளார்.
உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள், பிரபலங்கள் கிங்காங்கின் பிறந்த நாளில் தனது தாயாரை இழந்ததால் எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் அவரை தேற்றி வருகின்றனர். நடிகர் கிங்காங் தாயார் மறைவு அவரது ரசிகர்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.