ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர் கான்?

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2024-08-27 16:14 IST
ரஜினியின் கூலி படத்தில் அமீர் கான்?

சென்னை,

தமிழில் 'மாநகரம்' படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி நடித்த 'கைதி', விஜய்யின் 'மாஸ்டர்', கமல்ஹாசனின் 'விக்ரம்' படங்களை டைரக்டு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருகிறதாம். இந்த நிலையில், கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்