மோகன் நடித்துள்ள 'ஹரா' படத்தின் புதிய பாடல் வெளியீடு
விஜய் ஸ்ரீ இயக்கி உள்ள 'ஹரா' படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார்.;
சென்னை,
மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விஜய் ஸ்ரீ இயக்கி உள்ள இந்த படத்துக்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அனுமோல், கவுசிக் ராம், அனித்ரா நாயர், சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் 'ஹரா' படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஆசை தேவதை' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. விஜய் ஸ்ரீ எழுதியுள்ள இந்த பாடலை இர்வின் விக்டோரியா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.