'52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' - பார்த்திபன் இயக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

தனது அடுத்த படத்திற்கு, ‘52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-14 17:00 GMT

Image Courtesy : @rparthiepan twitter

சென்னை,

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கான தலைப்பு குறித்து பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தனது அடுத்த படத்திற்கு, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்