தேவாவுக்கு கிடைத்த வரவேற்பு

இசையமைப்பாளர் தேவா இசையமைத்த ‘அமைச்சர்’ படத்தில் 3 பாடல்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Update: 2022-05-01 01:43 GMT
இசையமைப்பாளர் தேவா இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அவர் சமீபத்தில் இசையமைத்த படம் ‘அமைச்சர்’. இந்த படத்தில் அவர் இசையமைத்த 3 பாடல்கள், ‘ஹிட்’ அடித்துள்ளன.

அதில், ‘‘தூள் பறக்குது...’’ என்ற பாடலை அவரே பாடியிருக்கிறார். ‘‘யார் சொல்வது முதலில் யார் சொல்வது’’ என்ற ‘மெலடி’ பாடலை ஸ்ரீனிசா, அஜய் ஆகிய இருவரும் பாட, ‘‘அடடா அடடா...’’ என்ற பாடலை கார்த்திக் பாடியிருக்கிறார்.

3 பாடல்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்