கே.ஜி.எப்' படத்தை விமர்சிக்கும் 'பேட்ட' வில்லன்
கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர். பட வெற்றிகளால் சினிமாவில் எதிர்பார்க்காத, மோசமான மாற்றங்கள் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விமர்சித்துள்ளார்.
மும்பை,
கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர். பட வெற்றிகளால் சினிமாவில் எதிர்பார்க்காத, மோசமான மாற்றங்கள் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விமர்சித்துள்ளார்.
ஒரு படம் வெற்றி பெறும் போது, இயல்பை மீறி அதனை சிலாகிப்பதும், அதேபோல ஒரு படம் சொதப்பினால் அதனை மிகக் கடுமையாக விமர்சிப்பதும் இந்திய திரையுலகில் தொடர்கதையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் உலக சினிமாக்களை அதிகம் பார்க்க தொடங்கிவிட்டதால், தரமான படைப்புகளை கொடுக்க வேண்டியது அவசியம் எனவும் நவாசுதீன் சித்திக் வலியுறுத்தியுள்ளார்.