சன்னி லியோன் நடிப்பில் காமெடி பேய் படம்
படத்தின் டைரக்டர் யுவன் இந்த படம் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட காமெடி பேய் படம் என தெரிவித்தார்.
ஒரு படத்துக்கு அதன் தலைப்பு மிக முக்கிய சிறப்பு அம்சமாக இருக்கும். அந்த சிறப்பு அம்சத்துடன் தயாராகி வரும் படங்களில், சன்னி லியோன் நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’டும் ஒன்று. இந்தப் படத்தில் அவர் மூன்று வேடங்களில் வருகிறார்.
படத்தின் டைரக்டர் ஆர்.யுவன் கூறியதாவது:-
“ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோன் அர்ப்பணிப்புடன் பணி புரிந்தார். அவர் இதுவரை நடித்திராத வேடம் இது. கதாபாத்திரத்துக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் இதுவரை செய்யாதது. தனித்துவமானது. இது, வரலாற்று பின்னணியில், ஒரு பேய் படம். திகில், நகைச்சுவை கலந்தது.
பார்வையாளர்களுக்கு மிக சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும்.
சன்னி லியோனுடன் சதீஷ், தர்சா குப்தா, ரவிமரியா, யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை ஆகியோர் நடிக்கிறார்கள். டி.வீராசக்தி, கே.சசி குமார் இணைந்து தயாரிக் கிறார்கள்.”