ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ் - பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் தோற்றங்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-04-27 07:59 GMT
சென்னை:

தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அனா டீ அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். 

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் டைரக்டு செய்துள்ளனர். 

தனுஷ் அமெரிக்கா சென்று மூன்று மாதங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்தது. படத்தில் தனுஷ் வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தி க்ரே மேன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் தோற்றங்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் தோற்றத்தையும் படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். கிறிஸ் இவான்சுடன் தனுஷ் இருக்கும் புகைப்படமும் வந்துள்ளது. 

இந்த படங்கள் வலைத்தளத்தில் வைரலாகிறது. தி க்ரே மேன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது


மேலும் செய்திகள்