சிறுவயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் - பிரபல இந்தி நடிகை

லாக் அப் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரனாவத், தானும் சிறு வயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.

Update: 2022-04-26 08:37 GMT
தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இந்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து கங்கனா கூறும்போது, ‘’நான் சிறு வயதில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டேன். நான் வாழ்ந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னை அடிக்கடி தகாத முறையில் தொடுவார். சில நேரம் ஆடைகளையும் களைய சொல்வார். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. இதுபோன்று ஒவ்வொரு வருடமும் நிறைய குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.‌ பாதிக்கப்பட்ட யாரும் பொதுவெளியில் இதனை வெளிப்படுத்துவது இல்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், மோசமான தொடுதல் குறித்து பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி சொல்லி கொடுத்தால்தான், சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை தடுக்க முடியும்'' என்றார்.

மேலும் செய்திகள்