“எத்தனை கோடிகள் கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்” - அல்லு அர்ஜூன்

சமீபத்தில் அல்லு அர்ஜூனை ஒரு முன்னணி புகையிலை நிறுவனம் விளம்பரத்துக்காக அணுகியது. அதற்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன்’’, என்றார்.

Update: 2022-04-24 04:07 GMT
தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படம் பெரும் வெற்றியை பெற்றது. சமீபத்தில் அல்லு அர்ஜூனை ஒரு முன்னணி புகையிலை நிறுவனம் விளம்பரத்துக்காக அணுகியது. கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாக கூறியும், உடலுக்கு கேடு விளைவிக்கும் புகையிலை விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் அல்லு அர்ஜுன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அந்த புகையிலை விளம்பர படத்தில் நடித்தால், நானே எனது ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வதுபோல் ஆகிவிடும். எனவேதான் நடிக்க மறுத்துவிட்டேன். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன்’’, என்றார்.

ரசிகர்களின் நலன் கருதி நடிகர் அல்லு அர்ஜுன் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்