நாக அம்மனின் பக்தையாக பிந்து மாதவி விரதம் இருந்து நடிக்கும் படம் ‘நாகா’

நாகா படத்தில், நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். இதற்காக அவர் சைவ உணவை மட்டும் சாப்பிட்டு, விரதம் இருந்து நடிக்கிறார்.

Update: 2022-04-22 09:40 GMT
அடிதடி, மகா நடிகன், ஜன்னல் ஓரம், குஸ்தி, பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய படங்களை தயாரித்த கே.முருகன் அடுத்து, ‘கருட பஞ்சமி’ படத்தை தயாரித்து வருகிறார். இதை யடுத்து அவர், ‘நாகா’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

‘கருட பஞ்சமி’ படத்தில் பிரபுதேவா, மகிமா நம்பியார் ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘நாகா’ படத்தில், நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். இதற்காக அவர் சைவ உணவை மட்டும் சாப்பிட்டு, விரதம் இருந்து நடிக்கிறார்.

தொல்லியல் ஆராய்ச்சியாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். யோகி பாபு, கருணாகரன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன.

மேலும் செய்திகள்