சந்தானம் நடிக்கும் 'குளு குளு' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'குளு குளு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Update: 2022-04-20 16:56 GMT
சென்னை,

நடிகர் சந்தானம் தற்போது தெலுங்கில் வெளியான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஏஜென்ட் கண்ணாயிரம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் 'குளு குளு' படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் குளு குளு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் சந்தானம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் இறுதிநாளன்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்