பயம் அறியாத கமல்ஹாசன்
விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரம் பயம் அறியாதவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே ‘விக்ரம்' படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுக காட்சி வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் பகத் பாசிலின் கதாபாத்திரம் அனைவரையும் அச்சுறுத்துபவன் என்றும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இரக்கமற்றவன் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கமல்ஹாசனின் கதாபாத்திரம் பயம் அறியாதவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #KamalHaasan#50daysforVikram#VikramFromJune3@ikamalhaasan@Udhaystalin@Dir_Lokesh@VijaySethuOffl#FahadhFaasil#Mahendran@anirudhofficial@turmericmediaTM@RedGiantMovies_pic.twitter.com/3WPLeloWQq
— Raaj Kamal Films International (@RKFI) April 14, 2022